பாணின் விலையை 50 ரூபாவால் குறைக்க முடியும்

0
216

பாண் ஒன்றுக்கான விலையை 50 ரூபாவாலும், பணிஸ் ஒன்றின் விலையை 25 ரூபாவாலும் குறைக்க முடியும், என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்

அரசாங்கம் தலையீடு செய்யுமாயின் குறித்த விலை குறைப்பை மேற்கொள்ள முடியும், என இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

கோதுமை மா உள்ளிட்ட மூலப்பொருட்களின் பாரிய விலை அதிகரிப்பு காரணமாக பேக்கரி உற்பத்திகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது.

பாண் மற்றும் பணிஸ் என்பனவற்றை பொதுமக்கள் கொள்வனவு செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.

அரசாங்கம் மற்றும் அதனுடைய நிறுவனங்கள் உதவி வழங்குமாயின் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையினை குறைக்க முடியும் எனவும், அதன்படி பாண் ஒன்றுக்கான விலையை 50 ரூபாவாலும், பணிஸ் ஒன்றின் விலையை 25 ரூபாவாலும் குறைக்க முடியும், எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here