பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “ஹொடு குமார” என்பவர் மாத்தறை, உயன்வத்த பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மாத்தறை, உயன்வத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் மிதிகம பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரின் வீட்டிலிருந்து 17 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் நேடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மிதிகம பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றின் அறையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெடிகுண்டு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.