பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் விபரங்களை உடனடியாக தருமாறு இராஜாங்க கல்வி அமைச்சு வேண்டுகோள்…..

0
164

பெருந்தோட்ட பகுதிகளில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் விபரங்களை உடனடியாக கல்வி இராஜாங்க அமைச்சுக்கு தெரிவிக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சரின் பிரத்யேக செயலாளர் அஜித்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். மலையகத்தில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலையால் பெருந்தோட்ட பாடசாலைகளில்; கூரைகள்
மற்றும் ஏனைய அனர்த்தங்களுக்குள்ளாகி இருந்தால் குறித்த பாடசாலைகளின் அதிபர்களை 071 5634455 கையடக்க தொலைபேசிக்கு உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் உடனடியாக அறிவிக்கும் பட்சத்தில் இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறை முடிந்து மூன்றாம் தவணை ஆரம்பிக்கும் முன்னர் மீள் திருத்தும்
நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

தலவாக்கலை பி.கேதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here