பாதிக்கப்பட்ட மக்களுக்காக 10 ஏக்கர் காணியை நன்கொடை வழங்கிய தேரர்!

0
46

டித்வா சூறாவளியால் சொத்துக்கள் சேதமடைந்த மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு இணைந்த வகையில், சியம்பலாபிட்டிய, யட்டோகொட, யடஹலென ரஜமஹா விகாராதிபதி, சமாதான நீதவான், தேசிய மனித உரிமைகள் பணிப்பாளர், சாசன கீர்த்தி ஸ்ரீ சத்தர்ம விசாரத வண, மாவீகந்தே ரதனபால தேரரினால் காணி நன்கொடையாக வழங்கப்பட்டது.

அதன்படி, தேரருக்குச் சொந்தமான கலிகமுவ பிரதேச செயலகப் பிரிவின் சியம்பலாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள பத்து ஏக்கர் தனியார் காணி இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்டதுடன், அதற்கான ஆவணங்கள் நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டன.

டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த மக்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகவும், அதன்படி, காணிகளை நன்கொடையாக வழங்க விரும்புவோர் www.rebuldingsrilanka.gov.lk என்ற இணையதளத்தில் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார்.

கலிகமுவ பிரதேச செயலக அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here