2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று மதியம் 2 மணிக்கு, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் சபையில் முன்வைக்கப்பட்டது.
நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 2 மணிக்கு கூடியது. இதன்போது சபைக்கு வந்த நிதி அமைச்சருக்கு ஆளுங்கட்சி எம்.பிக்கள் மேசைகளில் கைதட்டி பெரும் வரவேற்பளித்தனர். ‘ஜயவேவா, ஜயவேவா என கோஷமும் எழுப்பினர்.
பட்ஜட்டை முன்வைத்து உரையாற்றிக்கொண்டிருக்கும் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, இலங்கை பாதுகாப்பான நாடு எனவும், தடுப்பூசி ஏற்றுவதில் ஆசியாவில் முன்னணியில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், உலகளவில் தற்போதுள்ள நெருக்கடி நிலைமை மற்றும் இலங்கை எதிர்நோக்கிலுள்ள சவால்கள் பற்றியும் அவர விபரித்தார்.



