பாபுல் என்ற போதை பொருளை உட்கொண்டதால் சுவாசபையினுல் சிக்குண்டு உயிர் இழந்துள்ளதாக டிக்கோயா கிழங்கன் ஆதாரவைத்தியசாலையின் விஷேட வைத்திய நிபுணர் திருமதி இனோக்கரத்நாயக்க தெரிவிப்பு
அட்டன் புகையிர நிலையத்தில் 10.10.2018.புதன் கிழமை இரவு சடலமாக மீட்கபட்ட நபர் பாபுல் என்ற போதை பொருளை உட்கொண்டமையினால் போதை பொருள் சுவாசபையினுள் சிக்குண்டமையினாலயே சடலமாக மீட்கபட்ட நபர் உயிர்
இழந்துள்ளதாக டிக்கோயா கிழங்கன் ஆதராவைத்தியசாலையின் விஷேட வைத்திய நிபுணர் திருமதி இனோக்கா ரத்நாயக்க தெரிவித்தார்
சடலமாக மீட்கபட்ட நபர் கொழும்பு மட்டகுளி பகுதியை சேர்நத சுப்பையா தர்மலிங்கம் என்பவரின் பிரேத பரீசோதனை 11.10.2018.வியாழகிழமை டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்றபோதே இதனை குறிப்பிட்டார்
குறித்த நபர் தலவாகலை பகுதியை பூர்விகமாக கொண்டவர் எனவும் திருமணம் முடித்து கொழும்பு மட்டகுளி பகுதியில் வசித்து வருவதாகவும் இவர் நேற்றைய தினம் தலவாக்கலைக்கு வருகை தந்து மீண்டும் வீடு திரும்பிய வேலை அட்டன்
புகையிரத நிலையதில் வைத்து மரடைப்பு நோயினால் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேலை குறித்த நபர் உயிர் இழந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நபர் அதிகமாக பாபுல் என்ற போதை பொருளை பவித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது சம்பவம் தொடர்பில் பிரேத பரிசோதனையின் பின்னர் இன்றைய தினம் சடலம் உறவினர்களிடம் கையளிக்கபட்டமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)