பாம்பு கடித்த வலி! தாங்கமுடியாத வேதனையில் தற்கொலை செய்து கொண்ட வாலிபர்

0
141

பாம்பு கடித்த இடத்தில் வலி தாங்க முடியாமல் தவித்தார் அன்பரசன்.
தமிழகத்தில் பாம்பு கடி வலியை தாங்க முடியாத வேதனையில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காரைக்குடியை சேர்ந்தவர் 23 வயதான அன்பரசன்.கட்டட வேலை செய்து வந்த இவரை கடந்த வாரம் பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில், பாம்பு கடித்த இடத்தில் வலி தாங்க முடியாமல் தவித்தார் அன்பரசன். இதையடுத்து வீட்டின் அருகே உள்ள மரத்தில், அன்பரசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here