குறைந்த வறுமானம் பெறுபவர்கள், சமூர்த்தி பயனாளர்கள், வறுமானத்தை இழந்தவர்கள் என இக்கொரோனாவால் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் மீண்டும் நாளை முதல் 5000 ரூபாயை வழங்க வேண்டுமென அரசாங்கம் வழியுறுத்தியுள்ளது. அதனை பாரபட்சமின்றி வழங்குமாறு அகில இலங்கை முன்னேற்ற முன்னணியின் நிதிச்செயலாளர் ராஜ் பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் முதலாம், இரண்டாம் கொரோனா அலைகளின் போது 5000 ரூபா வழங்கப்பட்டது.ஆனால் அவை அனைத்தும் பாரபட்சத்தோடு வழங்கப்பட்டதாக பலர் குற்றம் சுமத்தினர்.சமுர்த்தி, கிராம சேவகர்களுக்கு தெரிந்தவர்கள் அறிந்தவர்களென என அவர்கள் நினைத்தது போல் பணத்தை வழங்கினர்.இதனால் பல உத்தியோகத்தர்கள் பொதுமக்களுக்கு பணம் வழங்கிய உத்தியோகத்தர்கள் தாக்கவும் செய்யப்பட்டனர்.இந்நிலை இம்முறையும் ஏற்படக்கூடாது. தகுதியானவர்களை தெரிவு செய்து 5000 ரூபாயை வழங்குமாறு ராஜ் பிரசாத் உரிய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீலமேகம் பிரசாந்த்