பாராளுமன்றத்திற்கு பொதுமக்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு நீக்கம்

0
184

பாராளுமன்றத்திற்கு பொதுமக்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு இன்று (20) முதல் தளர்த்தப்படுகிறது,அதன்படி நாளை முதல் பாராளுமன்றத்தின் பார்வையாளர் கூடம் திறக்கப்படும் இதற்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொவிட் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக பொதுமக்கள் பாராளுமன்றத்திற்கு வருவதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதுடன், இன்று முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் இல்லாத நாட்களில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பாராளுமன்றத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கான அனுமதியை பெற www.parliament.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக அல்லது 011 2 777 473 அல்லது 335 என்ற இலக்கத்திற்கு தொலைநகல் ஒன்றை அனுப்புவதன் மூலம் அனுமதியை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்கலைக்கழக மாணவர் குழுக்கள், அரச பதிவு செய்யப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் இதே நடைமுறை பின்பற்ற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here