பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் அலி சாஹிர் மௌலானா

0
290

முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது பாராளுமன்ற பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது.
அலி சாஹிர் மௌலானா சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சற்று முன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமான நிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது பாராளுமன்ற பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது.

குறித்த வெற்றிடத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர் அலி சாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தேர்தல் ஆணைக்குழுவால் அண்மையில் வெளியிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here