பாராளுமன்ற தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கினிகத்தேனையில் ஆர்ப்பாட்டம்!!

0
231

பாராளுமன்ற தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பத்துலட்சம் கையொப்பங்களை பெற்றுக்கொளாளும் நடவடிக்கைகள் மஸ்கெலியா தேர்தல் பிரதேசமான கினிகத்தேனை நகரில் 29.11.2018 அன்று முன்னெடுக்கப்பட்டது.அம்பகமுவ பிரதேச சபையின் தலைவர் ஜெயசங்க பெரேரா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கினிகத்தேனை நகர பஸ் நிலையத்திற்கு அருகில் ஒன்று கூடிய கட்சி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுப்பட்டனர்.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் சரியான தீர்வை பெற்றுக்கொள்ள உடனடியாக நடவடிக்கைகள் எடுத்து நாடாளுமன்ற தேர்தலை நடத்தும்படி வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக பதாதைகளையும் ஏந்தி இருந்தனர்.

இதனையடுத்து தேர்தலை வலியுறுத்திய மனுவில் கையொப்பமிடும் நடவடிக்கையும் இடம்பெற்றது.

DSC00963 DSC00976 DSC00981

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here