மத்திய மலை நாட்டில் நேற்று (24) மாலை முதல் மழையுடன் கடும் காற்று வீசி வருவதாக எமது செய்தியாளர்கள் கூறினர்.
ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் கேர்கஸ்வோல் பகுதியில் பாரிய மரம் முறிந்து விழுந்துள்ளதால் அந்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
நேற்று இரவு 7 மணியளவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு வீதியில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணிகளில் தோட்ட மக்களும் வீதி அபிவிருத்தி அதிகாரிகளும் ஈடுப்பட்டுள்ளனர்.