இன்றைய காலக்கட்டத்தில் விளையாட்டு போட்டிகள் பகலிரவு போட்டியாகவே பெரும்பாலும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.அந்தவகையில் பார்க் தோட்டத்திலும் பகலிரவு போட்டி நடத்த அதற்கு ஏற்றால் போல் மைதானம் தேவை என தேர்தல் காலத்தில் கேட்டதற்கு அமைய நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் அவ் மைதானத்தை புனரமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டினார்.மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பார்க் தோட்ட மைதானத்தை சுற்றி பாதுகாப்பு வேலி மற்றும் மின்விளக்கு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.இந்நிகழ்வில் நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ்,உறுப்பினர் ராமஜெயம் உட்பட தோட்ட மக்களும் கலந்துக்கொண்டனர்.
நீலமேகம் பிரசாந்த்