பாலத்தை புனரமைக்க நடவடிக்கை – நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் உறுதி!

0
178
” நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பொகவந்தலாவ, டின்சின்- கர்கஸ்வோல்ட் தோட்டத்தில் நடுக்கணக்குப்பகுதியில் உள்ள இப்பாலம் தொடர்பான தகவல்கள் தனக்கு உரிய வகையில் வழங்கும் பட்சத்தில் பாலத்தை புனரமைப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் ரவி குழந்தைவேலு உறுதியளித்துள்ளார்.

மேற்படி பாலம் தொடர்பிலும், அதனால் மக்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் பற்றியும் மலையக குருவி இன்று காலை பதிவிட்டிருந்தது. இது தொடர்பான தகவல்களை எமது செய்தியாளர் கே. சுந்தரலிங்கம் அனுப்பிவைத்திருந்தார்.

இதனை பார்வையிட்ட ரவி குழந்தைவேலு, பாலம் தொடர்பான மேலதிக தகவல்களை அப்பகுதியில் உள்ள எவராவது தொடர்பு கொண்டு வழங்கினால் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here