பாலிவுட்டில் “போன் கூட எடுக்க மாட்டார்கள்” – முன்னணி நடிகையின் ஆதங்கம்!

0
45

கமல்ஹாசனுடன் ‘இந்தியன்-2’, சிவகார்த்தி கேயனுடன் ‘அயலான்’ போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ரகுல் பிரீத்சிங். தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த ரகுல்பிரீத்சிங் பாலிவுட் திரை உலகில் அறிமுகமாகி படங்களில் நடித்து வருகிறார். பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்து கொண்ட ரகுல் பிரீத்சிங் பாலிவுட் அறிமுகத்தின் போது சந்தித்த அவமானங்கள் குறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் தெலுங்கில் பெரிய நடிகையாக இருந்த போதிலும் பாலிவுட்டில் அறிமுகமான போது என்னை ஒரு புதிய நடிகையாகதான் பார்த்தார்கள். பூஜ்யத்தில் இருந்து தொடங்க வேண்டியதிருந்தது. வெளியாட்கள் என்பதால் சிவப்பு கம்பள விரிப்புகள் கிடைக்காது. நடிகர்கள், இயக்குநர்களுக்கு போன் பண்ணினால் கூட எடுக்க மாட்டார்கள். அப்படியே எடுத்தாலும் அலட்சியமாகதான் பதிலளிப்பார்கள். ஒரு படத்தின் ஆடிஷனுக்காக அலுவலகம் ஒன்றில் மணிக்கணக்கில் காத்திருந்தேன். இது போன்ற சம்பவங்கள் எனக்கு மன உறுதியை தந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here