பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் அதிகாரி என கூறி பணம் கோரும் போலி தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் எச்சரிக்கை!

0
3

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் அதிகாரி என கூறி, பணம் கோரும் போலி தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

வர்த்தகர்களுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து அவர்களின் வர்த்தகத்தில் தவறுகள் இருப்பதாக கூறி, அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க, தான் கூறும் வங்கி கணக்கிற்கு பணத்தை பரிமாற்றம் செய்யுமாறு கோரும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இவ்வாறான போலி தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் 1977 அல்லது 0771088922 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here