கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களைச் சேர்த்துக் கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகாத காரணத்தினால் விமல் வீரவங்சவுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.




