அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் இருந்து துறைமுகம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு நீக்கப்படவில்லை. ஆனால், அரசாங்கத்தின் இலக்குகளை மிகவும் திறம்பட அடையும் வகையில் மட்டுமே அமைச்சுகள் மாற்றியமைக்கப்பட்டதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்றைய விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொள்கலன் சம்பவம் காரணமாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நீக்கப்பட்டாரா என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இந்த கருத்தை வெளியிட்டார்.
அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் புதிய மற்றும் மேலதிக பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை, பிமல் ரத்நாயக்க வசமிருந்த துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு அவரிடமிருந்து பறிக்கப்பட்டதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்கலன் அனுமதி ஊழல் இந்த நடவடிக்கைக்கு வழிவகுத்ததா என்று நாங்கள் யோசிக்கிறோம். எப்படியிருந்தாலும், இந்த நடவடிக்கைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.