பிரஜாவித்யா ஊடாக கல்விக்கு ஜீவ ஒளி – பாரத் அருள்சாமி பெருமிதம்

0
123

நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ” பிரஜாவித்யா ‘ வேலைத்திட்டம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக எனது பணிப்புரையின் கீழ் பிரஜாசக்தி அபிவிருத்தி செயற்றிட்டத்தினூடாக ” பிரஜாவித்யா ” வேலைத்திட்டத்தை கடந்த 04.06.2021 அன்று முதல் நாம் ஆரம்பித்துள்ளோம் என பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி தெரிவித்தார். கொவிட் வைரஸ் தொற்றுகாரணமாக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது . இதன்காரணமாக மாணவர்கள் இணையதளமூடாக தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் . இருப்பினும் மாணவர்களால் பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையும் நேரத்திற்கு பங்குகொள்வதற்கான சூழ்நிலை கிடைக்கவில்லை எனவும் சில செயலிகளுக்காண சமிஞ்சை கிடைப்பதில் சிக்கல்களும் சவால்களும் ஏற்படுகின்றன .

எனவே நாம் எல்லோரும் எளிதில் இணைப்பினை ஏற்படுத்திக்கொள்ளக் கூடிய செயலிகளான முகப்புத்தகம் ( Facebook ) , யூடியூப் ( You Tube ) , டுவிட்டர் ( Twitter ) ஆகிய செயலிகள் ஊடாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரசித்திப்பெற்ற , கைதேர்ந்த ஆசிரிய வல்லுனர்கள் , பேராசிரியர்கள் , பல்கலைகழக விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைகழக மாணவர்கள் மூலம் நேரடியாக கற்பித்தல் நடவடிக்கையினை மேற்கொள்வதோடு தற்போது பொது பரீட்சையினை எதிர்நோக்க உள்ள மாணவர்களுக்கு அதாவது தரம் 5 புலமை பரிசில் பரீட்சை கல்வி பொது தராதர சாதாரணதரம் , கல்வி பொது தராதர உயர் தரம் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கி அவர்கள் பரீட்சைக்கு தயார் படுத்தும் நோக்கில் இச்செயல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது .

அதன்போது நேரடியாக மாணவர்கள் கற்றல் நடிவடிக்கைகளில் ஈடுபடுவதன் காரணமாக தங்களது சந்தேகங்களையும் , கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளக் கூடியதாக உள்ளது . இதற்காக நவீன தொழிற்நுட்பத்தினையும் வரைபுகளையும் பயன்படுத்தி இதனை நாம் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றோம் என பாரத் அருள்சாமி தெரிவித்தார் . இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் நாங்கள் எப்பொழுதும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்குவதை நோக்காக கொண்டு செயல்படுவோம் . அந்த அடிப்படையிலேயே எமது பிரஜாசக்தி செயற்றிட்டத்தின் ஊடாக இச்செயல்திட்டத்தினை நடைமுறைப்படுத்திக் கொண்டு வருகின்றோம் .

அந்த வகையில் கடந்த காலங்களில் மறைந்த தலைவர் கௌரவ ஆறுமுகன் தொண்டமான் ஐயா அவர்களும் மற்றும் எனது தந்தை அருள்சாமி அவர்களும் கூட கல்வி நடவடிக்கைகளுக்காக அதீத முக்கியத்துவம் வழங்கி வந்துள்ளனர் . அதேபோல தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கபட்டுவிடக் கூடாது என்பதாலேயே இத்திட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களும் நானும் தொடர்ந்து முன் நிற்போம். இச்செயல்திட்டத்தின் வெற்றிக்கு காரணமாக இருக்கின்ற எமது பிரஜாசக்தி செயற்றிட்டத்தின் அணைத்து உத்தியோகத்தர்களுக்கும் நான் நன்றியையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கின்றேன் .

காரணம் அவர்களின் விடாமுயற்சியும் , உழைப்புமே வெற்றிக்கு காரணம் . மேலும் இத்திட்டத்தில் தரம் 5 புலமை பரிசில் , கல்வி பொது தராதர சாதாரணதரம் , கல்வி பொது தராதர உயர் தரம் ஆகிய தரங்களில் கற்கும் மாணவர்களுக்கு அவர்களின் அணைத்து பாடத்துக்குமான பாடவிதானங்கள் நாட்டின் பல்வேறு பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகின்றது . மேலும் இன்னும் பல ஆசிரிய வல்லுனர்கள் சேவை மணப்பாங்கோடு கற்பிக்க தயாராகவும் உள்ளனர் . அவர்களையும் நாங்கள் அன்போடு வரவேற்கின்றோம் .

மேலும் நிறைய மாணவர்கள் பங்குப்பற்றி பயனைடைவதையும் காணக்கூடியதாக உள்ளது . அத்துடன் கல்வித்திணைக்களங்களும் எமக்கு ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது .தற்போது டிஜிட்டல் தொழிநுட்பத்திற்கு மாறிகொண்டு வருகின்ற உலகத்தில் எமது மலைய மாணவர்களையும் கொண்டுவர வேண்டும் என்பதே எனது நோக்கம். எனவே உங்களுக்கு தெரிந்த அனைத்து மாணவர்களையும் இத்திட்டத்தில் பங்குபற்றி பயனடையுமாறு வழிகாட்டுங்கள் எனக் கேட்டுக்கொள்கின்றேன் .

அத்துடன் இத்திட்டத்தின் வளர்ச்சிக்கு உங்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கின்றேன் எனவும் தெரிவித்தார் . மேலும் மலையக மாணவர்களுக்காக ஆரம்பிப்பப்பட்ட இப் பிரஜாவித்யா செயல் திட்டமானது வடக்கு பகுதி மாணவர்களையும் சென்றடைந்துள்ளமையானது எனக்கும் எமது அமைச்சர் அவர்களுக்கும் பெருமையக உள்ளது என்றார் . அத்துடன் 04.06.2021 அன்று ஆரம்பிக்கப்பட்ட இப் ” பிரஜாவித்யா ” செயல் திட்டத்தில் இன்றுவரை சுமார் ஐம்பது பாடவிதானங்கள் கற்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார் .

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here