பிரதமர் மஹிந்தவிற்கு மற்றுமொரு ஐ.தே.க. உறுப்பினர் ஆதரவு!

0
180

ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இன்று காலை பிரதமர் மஹிந்தவை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த வடிவேல் சுரேஷ், புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், நல்லாட்சி அரசாங்கம் பிளவடைந்து புதிய பிரதமராக மஹிந்த பதவியேற்றுள்ள நிலையில், இரு பிரதான கட்சிகளும் பெரும்பான்மையை நிரூபிக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், கட்சி தாவல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், அன்றைய தினம் பெரும்பான்மையை நிரூபித்தால் மாத்திரமே புதிய பிரதமர் பதவி செல்லுபடியாகுமென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here