பிரபல தபேலா இசை மேதை சாகிர் ஹுசைன் தனது 73 ஆவது வயதில் இன்று காலமானார்.அமெரிக்காவிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலமானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதயக் கோளாறு காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரபல தபேலா இசைக்கலைஞரான இவர் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
அத்துடன் இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருதும் சாகிர் உசேனுக்கு வழங்கப்பட்டுள்ளது.