சக்கரை நோயின் தாக்கம் அதிகமானதால் அரசு மருத்துவமனையில் அவரின் கால் கட்டை விரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.பிரபல நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணனின் கால் கட்டை விரல் மருத்துவர்களால் அகற்றப்பட்டது.
நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து காமெடிக் காட்சிகளில் நடித்துள்ளார் பாவா லட்சுமணன்.
மாயி படத்தில் ‘வா மா மின்னலு’ என்ற காட்சிகள் இன்றுவரை பலரின் நினைவுகளில் இருக்கிறது.
அண்மை காலமாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் வருமானமின்றி தவித்து வந்த பாவா லட்சுமணன், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமானதால், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவரின் கால் கட்டை விரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.
இந்த தகவல் ரசிகர்களை மிகுந்த வருத்தமடைய செய்துள்ளது.