பிரபல தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் காலமானார்

0
241

ஆர்.எஸ் சிவாஜி நடிகர், இயக்குனர் சந்தான பாரதியின் சகோதரர் ஆவார்.பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் ஆர்.எஸ் சிவாஜி காலமானார்.67 வயதான ஆர்.எஸ் சிவாஜி தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக திகழ்ந்தவர்.

கமல்ஹாசனின் படங்களில் தொடர்ந்து நடித்த அவர் , “சார்… நீங்க எங்கயோ போயிட்டீங்க” என்று ‘அபூர்வ சகோதரர்கள்’ என்ற படத்தில் ஜனகராஜிடம் பேசிய வசனம் மிகுந்த புகழ்பெற்றது.

விக்ரம், கலைஞன், வில்லன், கோலமாவு கோகிலா உள்ளிட்ட 100க்கும் அதிகமான திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

ஆர்.எஸ் சிவாஜி நடிகர், இயக்குனர் சந்தான பாரதியின் சகோதரர் ஆவார்.இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சிவாஜி இன்று காலமானார்.

அவரின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here