பிரபல நடிகை ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி உயிரிழந்த தெமோதர ராஜகுமாரிக்கு நியாயம் வேண்டும்

0
162

பிரபல நடிகை ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக ஒரு வருடத்திற்கும் மேல் பணியாற்றி உயிரிழந்த பதுலை தெமோதர பகுதியைச் சேர்ந்த ராஜகுமாரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது கணவர் வாக்கு மூலம் அளித்துள்ளார.எனவே அவரது மரணத்திற்கும் நீதி வேண்டும் என ப்ரொட்டெக் தொழிற்சங்த்தின் உப தலைவி கருப்பையா மைதிலி கோரிக்கை விடுத்தார்.
19 திகதி ஹட்டன் ப்ரோட்டெக் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கடந்த 11 ம் திகதி தெமோதர பிரதேசத்திலிருந்து கொழும்பிலுள்ள பிரபல நடிகையின் வீட்டில் ஒரு வருட காலமாக வீட்டு வேலையில் ஈடுபட்ட ராஜகுமாரி என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.இந்த செய்தி பெரும்பான்மை வீட்டு வேலை தொழிலாளர்களை கொண்ட தொழிற் சங்கத்திற்கும் சங்க உறுப்பினர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் எமது நாட்டில் பல வருடங்களாக வீட்டு வேலைக்கு சென்று பல பெண்கள் உயிரிழந்துள்ளார்கள.; ஆனால் அவர்களுக்கு சரியான தீர்வோ,பாதுகாப்போ இது வரை செய்து கொடுக்கப்படவில்லை.அவர்கள் தொடர்பாக பல வருடங்களாக குரல் எழுப்பிக்கொண்டிருக்கின்றோம் ஆனால் அவர்களுக்கு நியாயம் எதுவும் இது வரை கிடைக்கவில்லை.அவரது கணவர் குறித்த பெண் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் உயிரிழந்தது பொலிஸ் விசாரணையில் தானா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு நடந்திருந்தால் அது வெட்கப்பட வேண்டிய விடயம்.
குறிப்பாக ஏனைய துறையில் பணிபுரியும் பெண்களை விட முறைசார துறையில் தான் இன்று இந்த நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி பாதிக்கப்படுகின்றனர் இதற்கு காரணம் அவர்களுக்கான தொழில் பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு இல்லாமையே.எமது நாட்டிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் போது பொலிஸ் விசாரணைகள் வெளிபடையானதாக இல்லாத ஒரு சந்தர்ப்பம் இருப்பதாக பெருவாரியான பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இந்த பெண்ணின் மரணத்திலும் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.இதனை நிவர்த்தி செய்ய வேண்டியது பாதுகாப்பு தரப்பினரின் பொறுப்பாகும்.இந்த விடயம் குறித்து ப்ரொட்டெக் தொழிற்சங்கம் தொடர்ந்தும் கண்காணித்துக்கொண்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here