இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பிரபல நடிகை அகன்சா துபே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இறக்கும் போது அவருக்கு 25 வயது. இவர் போஜ்புரி சினிமாவின் பிரபல நடிகை ஆவார். 17 வயதில் இருந்து நடிப்புத் துறையில் தனது பங்களிப்பை அளித்த அகன்சாவின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது இதுவரை வெளியாகவில்லை.
கடந்த 25ம் திகதி இரவு சமூக வலைதளங்களில் காணொளி ஒன்றை அனுப்பியிருந்தார்.
கடந்த காதலர் தினத்தன்று, இந்திய நடிகர் மற்றும் பாடகர் சமர் சிங் தனது காதலன் என்று ஆர்கன்சா பகிரங்கமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.