பிரபல பாடகர் கைது

0
237

இலங்கையின் பிரபல சிங்கள பாடகர்களில் ஒருவரான மதுமாதவ அரவிந்த அத்துருகிரிய அதிவேக மோட்டார் போக்குவரத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டிலே அரவிந்த அத்துருகிரிய கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து காரணமாக மதுமாதவவின் வாகனம் சேதமடைந்துள்ளதாகவும் அரசாங்க சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடவத்தையிலிருந்து கெரவலபிட்டிய வரையில் பயணம் செய்த போது மது மாதவ அரவிந்த அரசாங்க சொத்துகளுக்கு சேதம் விளைவித்தார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here