பிரபல வைத்தியசாலையில் நோயாளிக்கு வழங்கப்பட்ட உணவில் புழு!

0
94

கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல வைத்தியசாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்த காணொளியானது தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

குறித்த காணொளியில், இதயநோயாளியான தனது தந்தைக்கு உணவளிப்பதற்காக உணவு பொதியை திறந்த போது, அதில் ஒரு பெரிய புழு ஒன்று இருந்திக்கின்றது. “அது கோலிபிளவர் செலட்டில் இருந்து வந்திருக்கலாம்“ எனவும் நோயாளியின் மகள் வைத்தியசாலை ஊழியர்களிடம் பேசுவதையும் அவதானிக்கமுடிகின்றது.

மேலும், வைத்தியசாலையொன்றில் உணவுகளில் இப்படி இருப்பது அசாத்தியமானது. இந்த உணவு ஒரு இதயநோய் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு வழங்கப்பட்டது எனவும் காணொளியின் உரையாடலில் மூலம் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

தற்போது, இணையத்தில் இந்த காணொளி வைரலாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here