இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பிரெஞ்சு பிரஜையான ஆதித்யா ஆனந்தராசா (Aditya Anandarasa), பாரிஸிற்கு கிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செய்ன்-எட்-மார்ன் (Seine-et-Marne) மாகாணத்தின் பொன்டோல்ட்-கொம்போல்ட் (Pontault-Combault) நகராட்சியின் பிரதி மேயராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊர்காவற்றுறை (Kayts) தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட 25 வயதான ஆனந்தராசா, பிராந்தியத்தில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக பிரதி மேயராகப் பதவியேற்றார்.
ஆனந்தராசா தனது 19வது வயதில் முதன்முதலில் நகராட்சி மன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு தனது பொதுச் சேவையை ஆரம்பித்தார்.
அன்று முதல் அவர் மக்களுடன் நெருக்கமாகச் செயற்பட்டு வந்ததுடன், சமூக சேவை மற்றும் அடிமட்ட மக்கள் நலப் பணிகளுக்காகத் தன்னை அர்ப்பணித்து வருகின்றார்.




