நீஸ் – நேற்று வியாழக்கிழமை இரவு பிரான்ஸ் நாட்டின் நீஸ் (Nice) நகரில் மக்கள் திரளாகத் திரண்டு பாஸ்டில் (Bastille Day) திருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, அந்தக் கூட்டத்தில் புகுந்த பெரிய வாகனம் ஒன்று நெரிசல் மிகுந்த மக்கள் மீது செலுத்தப்பட்டதில் இதுவரை 73 பேர் பலி.
இது ஒரு பயங்கரவாதச் செயல் என வர்ணிக்கப்பட்டுள்ளது.
- வாகனத்தைச் செலுத்திய ஓட்டுநர் உடனடியாக பிரான்ஸ் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
- வாகனத்தைச் செலுத்தியவன் ஒருவன் மட்டும்தான் என்றும் அவன் யாரையும் துப்பாக்கியால் சுடவில்லை என்றும் காவல் துறை அறிவித்துள்ளது.
- அங்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளதோடு, உயிரிழந்தவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
- வாகனம் புகுந்தவுடன் திருவிழாக் கூட்டத்தினர் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
- சம்பவம் நடந்த நகர்ப்புறத்தைச் சுற்றியுள்ள மக்கள் தற்போதைக்குத் தங்களின் இல்லங்களை விட்டு வெளியே வர வேண்டாம் என காவல் துறையினர், எச்சரிக்கை விடுத்துள்ளனர்.