பிரித்தானியாவில் 34 இடங்களுக்கு அபாய எச்சரிக்கை!

0
267

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமாக மேற்கொள்ளவும் கேட்டுக்கொண்டுள்ளனர். பிரித்தானிய நாட்டின் 34 பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாய நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், வடகிழக்கை சேர்ந்த சுற்றுச்சூழல் முகமை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் எச்சரித்துள்ளது.

அத்துடன் சமீபத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமாக மேற்கொள்ளவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இடியுடன் மழையும் பெய்ய இருப்பதால், நதியில் வெள்ளத்தின் அளவு அதிகரிக்கலாம் எனவும், இது வெள்ளப்பெருக்கை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது 34 பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆகவே, அந்த பகுதிகளில் தீவிர கண்கானிப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றது.

முக்கியமான பொருட்களை குடியிருப்பிலேயே முதல் மாடிக்கு மாற்றப்பட வேண்டும். எரிவாயு, மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்தை மூடிவிட வேண்டும். தண்ணீரில் நின்று கொண்டே, மின் பொருட்களை தொட வேண்டாம் எனவும் மக்களுக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here