ரியோ டி ஜெனிரோ நகரம் உள்ளிட்ட பகுதிகளில் 52.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.பிரேசில் முழுவதும் 3,000 நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நாட்டு மக்கள் வரலாறு காணாத வெயிலை அனுபவிக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ரியோ டி ஜெனிரோ நகரம் உள்ளிட்ட பகுதிகளில் 52.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இந்நிலை வார இறுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதேவேளை 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
பருவநிலை மாற்றமே இதற்குக் காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.இதனடிப்படையிலேயே, தேசிய வானிலை ஆய்வு நிறுவனம் நாட்டின் பெரும் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஐந்து நாட்களுக்கு மேல் வெப்பநிலை இயல்பை விட 5 செல்சியஸ் அதிகமாக இருக்கலாம், இது கடுமையான உடல்நலக் கேடு விளைவிக்கும் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.