பிறந்து இரண்டு நாட்களேயானதாகக் கருதப்படும் சிசுவின் சடலத்தை, பெரகல சிங்காரவத்தை ஆற்றிலிருந்து, ஹப்புத்தளை பொலிஸார், நேற்று மாலை மீட்டுள்ளனர்.
மேற்படி ஆற்றுக்கு குளிக்கச்சென்ற நபர் ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியத் தகவலை அடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டுள்ளனர்.
பண்டாரவளை நீதிவானின் உத்தரவுக்கமைய, பிரேத பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
சிசுவின் தாயை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.