பிறந்து 28நாளே ஆனா சிசுவை கொலை செய்த தாயும், தாயாரும் எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு….

0
230

பிறந்து 28நாளே ஆனா சிசுவை கொலை செய்த சம்பவம் தொடர்பில் தாயும் தாயாரும் எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கும் படி ஹட்டன் நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொட்டகலை யூனிபில்ட் அந்தோனிமலை தோட்டபகுதியில் பிறந்து 28நாளே ஆனா சிசுவை கொலை செய்த குற்றச்சாற்றில் கைது செய்யபட்ட தாயும் அவரின் தாயாரும் எதிர் வரும் 18ம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு ஹட்டன்
நீதிமன்ற நீதவான் ஜோக்சி உத்தரவிட்டுள்ளார் .

04.01.2019.வெள்ளிகிழமை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தபட்ட போதே ஹட்டன் நீதவான்
ஜோக்சி அவர்களினால் இந்த உத்தரவூ பிரப்பிக்கபட்டுள்ளதோடு குறித்த சிசுவின் தாயாரை உடல்நல வைத்தியரிடம் அழைத்து சென்று குறித்த தாயினை பரிசோதனை செய்யுமாறும் ஹட்டன் நீதவானால் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு
உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது

03.01.2018.வியாழகிழமை ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை யூனிபில்ட் அந்தோனிமலை தோட்டபகுதியில் பிறந்து 28நாளே ஆன சிசு ஒன்றை பால் கொடுத்து உயிருடன் குழிதோண்டி புதைத்து விட்டு சற்று நேரம் கழிந்து
புதைக்கபட்ட இடத்தில் இருந்து சிசுவை தோன்றி எடுத்து தனது குழந்தைக்கு தொண்டை பகுதியில் பால் இருகி இறந்துள்ளதாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார். குறித்த சிசு இறந்தே வைத்தியசாலைக்கு கொண்டுவரபட்டதாக
கொட்டகலை வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்ததை அடுத்து சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் ஊடாக அட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கபட்டமையை அடுத்து விசாரனைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேகத்தின் பெயரின் இரண்டு பெண்களும் கைது செய்யபட்டதாக பொலிஸார் தெரிவித்தார்

எனக்கும் எனது கணவரும் இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டு ஒருமாதங்கள் கடந்துள்ளன எனது கணவர் கண்டி பகுதியில் தொழில் புரிந்து கொண்டிருந்தார் நான் ஆத்திரம் அடைந்ததன் காரணமாகவே குறித்த எனது குழந்தையை பால் கொடுத்து
குழி தோண்டி உயிருடன் புதைத்து மீண்டும் எனது குழந்தையை தோன்றி எடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக சிசுவின் தாய் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடதக்கது

இதேவேலை சிசுவின் பிரதே பரிசோதனை 04.01.2019.வெள்ளிகிழமை டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியின் தலைமையில் இடம் பெற்றபோது சிசுவின் உடலத்தின் ஒரு சில பாகங்கள் கொழும்பு இரசாயன
பகுப்பாய்வு தினைக்களத்திற்கு அனுப்பி வைக்கபட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

3

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here