பிறந்து 51 நாட்களே ஆன குழந்தை ஒன்று அனாதை இல்லம் அருகே கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.பண்டாரவளை அம்பேகொட சிறிசங்கபோ சிறுவர் இல்லத்தின் கேரேஜில் சிசுவை விடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளை பொலிஸார் குழந்தையை தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.எனினும், சிறுவர் இல்லத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, இரவில் ஆண் ஒருவர் வந்து குழந்தையை விட்டுச் செல்வது அவதானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.