மினுவாங்கொடை பிரதேசத்தில் பிறந்து 9 நாட்களே ஆன குழந்தையை வேறு ஒரு தரப்பினரிடம் சட்டவிரோதமான முறையில் விற்க முயன்ற பெண் ஒருவர் நேற்று (17) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமானப்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையின் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளினால் இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.28 வயதுடைய சந்தேக நபரான பெண் குழந்தையின் தாய் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது, மேலும், அவர் குழந்தையை 360,000 ரூபாவுக்கு விற்க திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மினுவாங்கொடை, பன்சில்கொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மினுவாங்கொடை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.