கந்தளாய் – பேராறு பிரதேசத்தில் பிறந்த சிசுவை கொலை செய்து எறித்த தாயொருவர் கந்தளாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராறு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிவதாகவும், வேறொரு நபருடன் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.