பிறந்து 14 நாட்கள் ஆன பெண் குழந்தையின் கட்டை விரலை வெட்டி எடுத்த செவிலியர்களின் செயல் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவருக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது. இந்நிலையில் கணேசனின் மனைவிக்கு கடந்த 25ஆம் தேதி தஞ்சை அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை குறைமாதத்தில் பிறந்ததால் வயிற்றில் பிரச்சினை இருப்பதாகவும் எனவே தாய்ப்பால் கொடுக்காமல் குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று வீடு திரும்பும் நேரத்தில் கையில் இருந்த ஊசியை அகற்றுவதற்கு பதிலாக கையின் கட்டைவிரலை செவிலியர்கள் வெட்டியதால் விரல் துண்டானது. மேலும் மருத்துவர்கள் உரிய விளக்கம் அளிக்காததால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.“
ஊசி என் நினைத்து பிஞ்சுக்குழந்தையின் கை விரலை மருத்துவமனை செவிலியர்கள் வெட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.