பிறப்புச் சான்றிதழ் இன்றி அடையாள அட்டை விநியோகிக்கும் திட்டம் ஆரம்பம்

0
241

வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள 40 வயதுக்கு மேற்பட்ட இலங்கை பிரஜைகள் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியும்
பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் தேசிய அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

40 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்தி தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறிப்பிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவில் நிரந்தர வதிவிடத்தைக் கொண்ட, வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள 40 வயதுக்கு மேற்பட்ட இலங்கை பிரஜைகள் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் அடையாள அட்டையினை பெற்றுக்கொள்வதில் பொது மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய தேசிய ஆவணமாக அடையாள அட்டை காணப்படும் நிலையில், அடையாள அட்டை இன்றி நாட்டு மக்களால் எந்தவொரு உத்தியோகபூர்வ தேவையினையும் பூர்த்திசெய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையில், பிறப்புச் சான்றிதழ் இன்றி தேசிய அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளும் திட்டம் பெரிதும் நன்மை பயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here