புகையிரத டிக்கட் போராட்டத்தால் மக்கள் இன்று இலவசமாக புகையிரதங்களில் பயணம்….

0
191

புகையிரத சேவையாளர்கள் பதவி உயர்வு, புகையிதங்களை அதிகரித்தல், பயணிகளுக்கு வசதிகள் பெற்றுக்கொடுத்தல், சேவை மூப்பின் அடிப்படையில் பதவி உயர்வு, உள்ளிட்ட 20 மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் புகையிரத ஊழியர்கள் கடவுச்சீட்டு வழங்கும் பணியினை இடைநிறுத்தி தொழிற்சங்க போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டம் நடைபெற்ற போதிலும் புகையிரத பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பயணிகள் இன்று (24) புகையிரதத்தில் இலவசமாக பயணிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக பயணிகள் தெரிவித்தனர். மலையக புகையிரத நிலையங்களில் அதிகமானவற்றில் இன்று வருகை தந்த புகையிரத பயணிகளுக்கு புகையிரத கடவை சீட்டுக்கள் வழங்கப்படாத போதிலும் மேல் வட்டவளை, ரொசல்ல உள்ளிட்ட ஒரு சில புகையிரத நிலையங்களில் மாத்திரம் டிக்கட்கள் வழங்கப்பட்டதாகவும் அதிக புகையிரத நிலையங்களில் புகையிரத் டிக்கட்கள் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

ஒரு சிலர் இதனை நத்தார் பரிசாக கருதுவதாகவும் தெரிவிக்கின்றனர். குறித்த டிக்கட் போராட்டம் இன்று நாளையும் நடைபெறுவதாகவும் இதற்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாகவும் புகையிரத ஊழியர்கள் தெரிவித்தனர். இன்று நாடு முகம்கொடுத்துள்ள நிலையில் டிக்கட் இன்றி பயணஞ் செய்தால் மேலும் மேலும் நாடு பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படும் என இன்னும் ஒரு சிலர் தெரிவித்தனர்.

எது எவ்வாறான போதிலும் முன்கூட்டிய டிக்கட் பதிவு செய்தவர்களும், புகையிரத பயணஞ் சீட்டிக்களை முன்கூட்டியே ஒதுக்கிக்கொண்டவர்களும் வழமை போல் தங்களது பயணங்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here