பதுளை – கொழும்பு பிரதான புகையிரத போக்குவரத்து பாதையில் அட்டன் மற்றும் கொட்டகலை ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் சிங்கமலை சுரங்கப்பகுதிக்கு அருகாமையில், 109வது மைல் கட்டைப்பகுதியில் 18.08.2018 அன்று அதிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மலையக புகையிரத சேவைகள் தாமதமாகி சென்றன.அதன்பின் பாதிப்பு ஏற்பட்ட புகையிரத பாதையை சீர்செய்யும் பணிகளில் புகையிரத நிலைய ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டன.
தற்பொழுது புகையிரத பாதையை சீர் செய்துள்ளதோடு, மலையகத்திற்கான புகையிரத சேவை வழமைக்கு மாறியுள்ளதாக அட்டன் புகையிரத நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
18.08.2018 அன்று மலையக பகுதிகளில் பெய்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாகவே இந்த புகையிரத பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
அதேவேளை மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
(க.கிஷாந்தன்)