புசல்லாவை ஸ்ரீ கல்கி மாணவ சேவா அமைப்பின் நன்மைபெறும் புலமை பரீசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்கள்!!

0
199

புசல்லாவை ஸ்ரீ கல்கி மாணவ சேவா அமைப்பு கடந்த காலங்களில் பல கல்வி தொடர்பான சேவைகளை புசல்லாவை பகுதியில் முன்னெடுத்து வருகின்றமை பாராட்டதக்கவிடயமாகும்.

அதன் அடிப்படையில் புசல்லாவை பகுதியில் தரம் 5 புலமை பரீசில் பரீட்சையில் தோற்றும் கிட்டதட்ட.2000 மாணவர்கள் பலன் பெரும் வகையில் ஸ்ரீ கல்கி மாணவ சேவா அமைப்பு மாதந்தோரும் புலமை பரிசில் கருத்தரங்குகளுக்கு தேவையான வினாத்தாள்களை வழங்குவதுடன் மாணவர்களையும் ஊக்குவித்து கற்பிக்கும் ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்தி வருகின்றனர்
இப்பயிற்சியின் ஊடாக மாணவர்கள் நல்ல பெறுபேறுகளை பெறுகின்றமை முக்கியமான விடயமாகும்.

இதற்கு தொடர்ந்து உதவி செய்து வரும் AB Travels உரிமையாளர் .I.V S .விஜயன் தெரிவிக்கையில்

நான் இந்த பிரதேசத்தில் பிறந்து ,வளர்ந்து சாதாரணமாக இருந்து இன்று வியாபாரத்தில் தன்னை உயர்த்திக்கொண்டு தான் சார்ந்த சமூகம் முன்னேற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான் இத்திட்டத்தை முன்னெடுக்கின்றேன் எமது சமூகத்திற்கு பல வரலாறு உள்ளது இந்த நாட்டை அழகுபடுத்தியதுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தம்மை அர்ப்பணித்தவர்கள் எமது தாய் தந்தையர்கள் ஆரம்பம் தொட்டு இன்று வரை வளர்ச்சி அடையாதவர்களாகவே அடையாளம் காட்டப்படுகிறது.

FB_IMG_1532252807735

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதற்காகவே நான் இச்சேவையை செய்துவருகிறேன் கடந்த காலங்களில் இவ்வாறான பயிற்சி நடத்தியதன் காரணமாக அதிகமான மாணவர்கள் சித்தியடைந்தனர் இவ்வருடமும் அதிகமானோர் சித்தியடைவார்கள் எமது சமூகத்தின் மாற்றம் கல்வியில் தான் உள்ளது எனவே தான் எங்களுடைய அமைப்பு கல்வி தொடர்பான விடயங்களை முன்னெடுக்கின்றது. என இவர் மேலும் தெரிவித்தார்.
அக்கரப்பத்தனை நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here