இன்றைய தினம் ஸ்ரீபாத தேசியற்கல்வி கலாசாலையில் பட்டதாரி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கான பதின்மூன்று வருட உத்தரவாதம் அளிக்கப்பட்ட கல்வி செயற்பாடுகள் ஆரம்பாமாகியது.இந்நிகழ்வில் கல்வியமைச்சின் மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் இந்நிகழ்ச்சிக்கான அதிகாரியும் சிரேஷ்ட விரிவுரையாளருமாகிய கருணாகரன் அவர்கள் கலந்துக்கொண்டார்.
அத்தோடு கலாசாலையின் பீடாதிபதி ரமணி அபேநாயக்கவும் ,உபபீடாதிபதிகளான சீர்பாதம்,லோகேஷ்வரன் சஞ்சீவி மற்றும் விரிவுரையாளர்களான ராமச்சந்திரன்,மெத்யூ,சிவக்குமார்,பரசுராம்,போன்றோர்களும் கலந்துக்கொண்டனர்.
பட்டதாரி ஆசிரியர்களை பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் எனும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்காவின் எண்ணப்பாட்டினூடாக திசைமுகப்படுத்தல் செயற்பாடுகள் ன்றுமுதல் கலாசாலையில் தொடர்ச்சியாக இருபது நாட்களுக்கு நடைபெறும்.
ஆசிரியர்களுக்கான தங்குமிட வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் இருநூறுக்கு மேற்பட்ட வடகிழக்கு பட்டதாரிகள் பயிற்சி பெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்ச்சி நிரல் பற்றி தேசிய கல்வி நிறுவகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கருணாகரன் பேசுகையில் பரீட்சையில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான வரப்பிரசாதமாகவும் எழுத்து பரீட்சையில் பிரகாசிக்க தவறியவர்களுக்கும் திறமை உண்டு என நிரூபிப்பதற்கான சந்தர்ப்பமாகவும் இந்நியமனத்தினூடாக அதற்கான தீர்வாக அமையும் என்றும் கூறினார்.
இறுதிக் கட்டப் பயிற்சி தேசிய கல்வி நிறுவகத்தில் ஆகஸ்ட் இருபத்தேழு முதல் செப்டெம்பர் ஐந்து வரை நடைபெறும்.சதீஸஷ்
ஷான் சதீஸ்