முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்உ ள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நெலும் மாவத்தையில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்றுக் காலையில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய கொள்கையுடன் கூடிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்குமாறு, மஹிந்தவிடம் உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.