தமிழக வெற்றிக் கழகம் சார்பில் “MY TVK” என்ற புதிய செயலி எதிர்வரும் 15 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், குறித்த செயலியை அறிமுகம் செய்து வைக்கவுள்ளதாகத் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
தேர்தலை முன்னிட்டு, இந்த புதிய செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.