நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டிருந்தாலும், அடுத்த கட்ட வளர்ச்சியை அடைவதற்கு அரசாங்கத்திடம் எந்தவிதமான வேலைத்திட்டமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த பாதீட்டுத் திட்டத்தில் பல முரண்பாடுகள் இருப்பதாகவும், கொள்கை ரீதியான விடயங்கள் ஒன்றுடன் ஒன்று முரண்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த பாதீட்டில் நிறைய குழப்பங்கள் இருப்பதாகவும், கொள்கைளுடன் முரண்படும் இது கிறிஸ்தவ பாதிரியார் விகாரையில் பாராயணம் செய்வதைப் போன்றது என ஹர்ஷ டி சில்வா இதன்போது தெரிவித்தார்.
மேலும் ஜனாதிபதியின் ஊழல் எதிர்ப்பு வேலைத்திட்டத்தை நாங்கள் பாராட்டுகிறோம்.
திருடர்கள் பிடிபடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், இது ஒரு பழிவாங்கும் வேட்டையாக மாறக்கூடாது என ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்தார்.




