2019ஆம் ஆண்டு வர்த்தமாணியில் அறிவித்தல் படி உடனடியாக பிரதேச செயலகங்களை உருவாக்க வேண்டும் என வழியுருத்தி போராட்டம் ஒன்றினை கிராம அபிவிருத்தி மன்றங்களின் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் முன்னெடுத்தனர்.
நுவரேலியா பிரதேச செயலங்களில் உப காரியாலயாங்களில் பத்து பிரிப்பதற்கு 2019ம் ஆண்டு கேசர்ட் செய்யப்பட்டது. அதனடிப்படையில் தலவாக்கலை உப காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது அதற்கு ராகளையில் காரியாலயம் ஒன்று திறப்பதாக 2019ம் ஆண்டு கேசர்ட் மூலம் அறிவிக்கப்பட்ட போதிலும் அவ்விடத்தில் பிரதேச செயலகம் ராகளையில் அமைக்காதலால் ராகளை பிரதேச மக்கள் நுவரேலியாவுக்கு வருவது பெரும் சிரமம்.
அவர்கள் நுவரேலியா அல்லது வளப்பனை பிரதேசங்களுக்கு செல்ல வேண்டும். அதிகமான தமிழ் மக்கள் வாழும் பிரதேசமாக ராகளை பிரதேசம் இருப்பதால் அப்பிரதேசங்களில் உள்ளவர்களில் கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் கிராமத்தில் இருக்கும் பல சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று நுவரேலியா மாவட்ட செயலகதிற்கு முன்பாக இன்று பதாதைகளை ஏந்தியவாரு 60ற்கு மேற்பட்டோர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து அவர்கள் நுவரேலியா பிரதேச செயலாளர் மாவட்ட உப செயலாளர் சுஜிவ போதிமானிடம் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.