புது பொலிவுடன் மீண்டும் வெளியாகும் ஆளவந்தான்

0
213

இத்திரைப்படத்தில் அதி நவீன டெக்னாலஜியாகக் கருதப்பட்ட motion control camera பயன்படுத்தப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் படம் உலகமெங்கும் ஆயிரம் திரையரங்கில் மீண்டும் புது பொலிவுடன் வெளியாகவுள்ளது.

2001 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் அதி நவீன டெக்னாலஜியாகக் கருதப்பட்ட motion control camera பயன்படுத்தப்பட்டது.

இந்தியாவில் இந்த டெக்னாலஜி முதன் முறையாகப் பயன்படுத்தப்பட்ட படம் ஆளவந்தான் படம் தான்.

இந்நிலையில், ஆளவந்தான் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, ஆளவந்தான் படம் 22 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் ரீதியாக மேம்படுத்தப்பட்ட படமாக 1000 திரையரங்குகளில் உலகமெங்கும் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here