புத்தபெருமானின் பிறப்பு துறவரம் பரிநிர்வாணம் உள்ளிட்ட மூன்று நிலைகளை நினைவு கூறும் வெசாக் பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு நாடு முழுவதிலும் பௌத்த விகாரைகளில் பூஜை வழிபாடுகளும்,தான தர்மங்களும் இடம்பெற்றுவருகின்றன. அவர் வாழ்நாள் முழுவதிலும் தான தர்மங்களையே செய்து வந்தார்.
இதனை பின்பற்றி சகல இன மக்களும் இணைந்து இவ்வாறு ஒரு நிகழ்வினை ஏற்பாடு செய்திருப்பதனையிட்டு மிகவும் மிகழ்ச்சியடைவதாகவும் இது சிறுவர் முதல் பெரியோர் வரை எடுத்துக்காட்டாகவும் உள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்தார்.
கொட்டகலை ஐக்கிய வர்த்தகம் சங்கம் இரண்டாவது நாளாகவும் ஒழுங்கு செய்திருந்த அன்னதான நிகழ்வு அச்சங்கத்தின் தலைவர் புஸ்பா விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. அதனை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கொட்டகலை ஐக்கிய வர்த்தகம் சங்கம் நல்லிணக்கத்தினை அடியொட்டி தமிழர் செறிந்து வாழும் கொட்டகலை நகரில் 10 வது தடைவையாக ஒழுங்கு செய்திருந்த அன்னதான நிகழ்வு இன்று -6 ம் திகதி இரண்டாவது நாளாக இடம் பெற்றது.இதில் பல்வேறு இனங்களை சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தனர்.
குறித்த அன்னதான நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். இதே வேளை கொட்டகலை கொமர்சல் புதிய நகர் பகுதியிலும் அன்னதான நிகழ்வு ஒன்று மிகவும் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
கொமர்சர் புதிய நகர் துர்க்கையம்மன் ஆலயத்தின் பிரமத குரு சிவஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா அவர்களின் சமய வழிபாடுகளுடன் ஆரம்பித்த குறித்த நிகழ்வில் பொது சுகாதார பரிசோதகர்கள்,ஹட்டன் மற்றும் திம்புல்ல பத்தனை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள்,கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவர் புஸ்பா விஸ்வநாதன் பிரதேச வர்த்தகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அன்னதான நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.
தமிழர் செறிந்து வாழும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரதான நகரங்களில் இன நல்லிணக்கத்தினை அடிப்படையாக கொண்டு இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ந்து
மலைவாஞ்ஞன்