புரட்டொப்ட் பகுதியின் ஐந்து பாலங்களுடன் கொத்மலை பிரதேசத்தின் பல பாலங்கள் புனரமைப்பு….

0
168
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க உள்ளுராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஷர் முஸ்தபா அவர்களினால் முன்னெடுக்கப்படும் ஆயிரம் பாலங்கள் வேலைத்திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்திலும் பல பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கமைய கொத்மலை பிரதேசத்திலும் புரட்டொப்ட் பகுதியில் மேரியில்,புரட்டொப்ட்,ரஸ்புரூக்,மற்றும் பூச்சிகொடையில்  இரண்டு பாலங்களும்   நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் ஹல்பொட வடக்கு,லபுக்கெல,டன்சீன் மேல் பிரிவு,இரம்பொடை போன்ற பெருந்தோட்டபகுதிகளின் பாலங்களும் புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாகாண சபை உறுப்பினர் பிலிப்குமார் அவர்களின் நேரடி தொடர் வேலைத்திட்டத்தின் கீழ்  பாலங்கள் புனரமைக்கப்படவுள்ளது. இதற்கான அளவீடுகள் பால நிர்மாணத்துரை அதிகாரிகளுடன் மாகாணசபை உறுப்பினர் பிலிப்குமார் புரட்டொப்ட் வட்டார கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் கதிர்காமத்தம்பி ரஜீவ்காந்தி ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது.
பாலத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன்  மண் பரிசோதணையின் பின்னர் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் இதன் முதற்கட்டமாக புரட்டொப்ட் ரஸ்புரூக் பாலம் புனரமைக்கப்படவுள்ளதுடன் புனரமைப்பு பணி காலநிலை சீர்கேடு காரணமாக தாமதமடைந்துவருகிறது.வெகு விரைவில் பாலம்  அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்படும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here