புரட்டொப்ட் வட்டார கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் கதிர்காமத்தம்பி ரஜீவ்காந்தி அவர்களின் வேண்டுகோளுக்கு இனங்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் முன்னால் மத்திய மாகாண அமைச்சர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புரட்டொப்ட் தோட்ட ஆலயத்திற்கான ஒலிப்பெருக்கி மற்றும் புரட்டொப்ட் பகுதியில் உள்ள பல தோட்டங்களை சேர்ந்த விவசாயிகளை விவசாயத்துறையில் ஊக்குவிக்கும் நோக்கில் பத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உழவு இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் புரட்டொப்ட் வட்டார கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் கதிர்காமத்தம்பி ரஜீவ்காந்தி மற்றும் தோட்ட தலைவர்கள் இளைஞர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.